இந்தியா
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது: மத்திய அரசு

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே பாலின உறவை, “கணவன், மனைவி மற்றும் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் இந்தியக் குடும்பக் கருத்துடன் ஒப்பிட முடியாது” என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Govt Of India
மேலும், ஒரே பாலின உறவுகள் மற்றும் பாலின உறவுகள் தெளிவாக வேறுபட்ட வகுப்புகள், அவை ஒரே மாதிரியாக நடத்தப்பட முடியாது என்றும் மத்திய அரசு அதில் கூறியுள்ளது.