இந்தியா
ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி விட்டது தங்கத்தின் விலை….
சமீப நாட்களில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை ஏழை மற்றம் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக் கனியாக போய்விட்டது.

இதேபோல்தான் கொரோனா காலகட்டத்திலும் நகைக்கடைகள் திறக்காத போதும் மக்கள் நடமாட்டமில்லாத போதும் 22000 இருந்த விலை 40000ஐ தாண்டிச் சென்றது. இப்போது கடந்த இரண்டு மாதங்களாக ஏறுமுகமாகவே இருந்து இன்று ஒரு சவரன் ரு.97000 கடந்து சென்று விட்டது. ஒரு கிராம் ரு.12300 தாண்டி நிற்கிறது.
சர்வதேச சந்தை நிலவரமும் திருப்தியளிக்கக் கூடிய நிலையில் இல்லை. பொருளாதார வல்லுநர்களும் இனி தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று கையை விரித்து விட்டனர்.
சரி.. 24 கேரட் மற்றம் 20 கேரட்தான் இந்த விலை என்று பார்த்தால் 18 கேரட் தங்கமும் ஒரு கிராம் ரு.9870- என இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
Gram | 24K Gold | 22K Gold | 18K Gold |
1 gm | ₹13,099.40 | ₹12,007.78 | ₹9,824.55 |
| 8 gm | ₹1,04,795.17 | ₹96,062.24 | ₹78,596.38 |
| 10 gm | ₹1,30,993.96 | ₹1,20,077.80 | ₹98,245.47 |
மேலே உள்ள அட்டவணை உங்களுக்கு விவரமாக தெரிவிப்பது இன்றைய தங்கத்தின் உச்ச விலை நிலவரம்.
18 கேரட் தங்த்தைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது ஒன்றிய அரசு அணைத்துத் தரப்பினரும் தங்கம் வாங்குவதை ஊக்கு விக்கும் வகையில் 9 கேரட் தங்க நகைகள் தயாரிப்பை ஊக்குவித்து அதற்கும் ஆல்மார்க் முத்திரை போட்டுத் தருவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இனிவரும் நாள்களில் சாமானிய மனிதர்கள் பொன்மகள் வந்தாள் என்று கனவில் மட்டுமே திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.
