செய்திகள்
சாமானிய மனிதனுக்கு எட்டாக் கனியாகப் போகிறதா தங்கம் வாங்குவது? எகிறும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை 04.04.2025 லிருந்து 08.04.2025 வரை ரூ.2460 வரை குறைந்தது பார்த்து தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டை செய்ய ஆரம்பித்த தருணத்தில் 09.04.2025 அன்ற மட்டும் ரூ.1480 ம், 10.04.2025 அன்று ரூ.400 ம் இன்று 11.04.2025 ரூ.1480 ம் உயர்ந்து நகை வாங்குபவர்கள் ஆசையில் மண்ணை போடும் விதமாக உயர்ந்து விட்டது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை விவரம் பின்வருமாறு.

இப்படியே விலையேறினால் செபடம்பரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9450 ஐ தொடும் என்கிறார்கள். அப்படியன்றால் ஒரு சவரன் ரூ.1,00,000- ரூபாய் ஒரு இலட்சத்தை எட்டும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகப் போய்விடும்.
ஏற்கனவே ஏறிய ஜிஎஸ்டி, டோல்கேட் கட்டணம், வங்கி கட்டணம் ஆகியவற்றுடன் இந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றமும் சேர்ந்து சாமானிய மக்களை மேலும் பரம ஏழையாக்கப் போவது உறுதி. ஆட்சியாளர்கள் இதை கண்டு கொள்ளப் போவதில்லை என்பதும் உறுதி.













