Connect with us

வணிகம்

Gold Price 2026: அடுத்த ஆண்டு தங்கம் விலை உயரும்? உலக தங்க கவுன்சில் முக்கிய எச்சரிக்கை!

Published

on

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவில் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் முதலீட்டாளர்கள் ஆகிய காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தங்கம் மங்களகரமான உலோகவாகக் கருதப்படுவதால், அனைத்து பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளிலும் தங்கம் பரிசாக வழங்கப்படும் வழக்கம் உள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை மிகுந்த ஏற்றத்தை கண்டுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அதிக நிதிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 2026 புத்தாண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை சுமார் 53% வரை உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை மேலும் 15% முதல் 30% வரை உயர வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்விற்கு முக்கிய காரணங்களாக:

  • உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள்

  • அமெரிக்காவில் வட்டி விகிதங்களில் சாத்தியமான குறைவு

  • பாதுகாப்பான முதலீடுகளுக்கான அதிகரிக்கும் தேவை

ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இந்த சூழ்நிலைகள் நீடித்தால், தங்கம் விலை தற்போதைய அளவைவிட குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மறுபுறம், அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து, டாலர் மதிப்பு வலுப்பெற்று, பத்திரங்களின் வருவாய் அதிகரித்தால், தங்கத்தின் விலை 5% முதல் 20% வரை குறையக்கூடும் என்றும் உலக தங்க கவுன்சில் எச்சரித்துள்ளது. இது 2026 ஆம் ஆண்டில் திருமணத்திட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஓரளவு நிம்மதியான செய்தியாக இருக்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்கம் விலை சரிந்தாலும் அது முற்றிலும் நீண்ட காலத்துக்கு கீழே நிலைத்திருக்காது. இந்திய நுகர்வோர், ஆசிய நகை சந்தைகள் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்கள் விலை குறையும் போதெல்லாம் அதிகமாக தங்கம் வாங்கத் தொடங்குவதால், தங்கம் விலை மீண்டும் மேலே செல்லும் வாய்ப்பு அதிகம் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை உயர்வும், வீழ்ச்சியும் கலந்த ஏற்ற இறக்கமான ஆண்டாக இருக்கும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
Find out what a metal shingle roof is an.