Connect with us

தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

Published

on

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 5 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4387.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 ரூபாய் குறைந்து ரூபாய் 4382.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35096.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 40 குறைந்து ரூபாய் 35056.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4746.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37968.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 5ம், ஒரு சவரன் ரூபாய் 40ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 64.60 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.80 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 64800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your creator storefront at a flat 5% fee – with DR68 SEO and zero monthly fees..