இந்தியா
இந்தியாவை விட்டு வெளியேற கூடாது: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் நிபந்தனை

அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் என்பவருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த சாந்தா கோச்சார் அவர்கள் வீடியோகான் நிறுவனத்திற்கு 1875 கோடி ரூபாய் முறைகேடாக கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த கடன் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதற்கு கைமாறாக கோச்சார் கணவர் பெயரில் உள்ள நிறுவனத்தில் பல கோடி ரூபாயை வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிதி மோசடி குறித்த வழக்கு இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சாந்தா கோச்சா ஆஜரானார். இதனை அடுத்து அவர் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தபோது அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை வழங்கினார்.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையை சாந்தா கொச்சார் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெற உள்ளது

















