உலகம்
ரூ.12 கோடி லாட்டரி சீட்டு வென்ற இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

12 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு வென்ற இளைஞருக்கு நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு பிறப்பித்துள்ளது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற கனவில் பலர் லாட்டரி சீட்டு வாங்குவார்கள் என்பதும் அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்று கோடீஸ்வரர் ஆகி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
லாட்டரி சீட்டு விழுந்தவர்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் கிடைத்தாலும் அந்த பரிசு கிடைத்தவுடன் ஏற்படும் பிரச்சனைகள் சொல்லி மாளாது என்பதை லாட்டரி சீட்டு விழுந்தவர்களின் பேட்டிகளில் இருந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 12 கோடி லாட்டரி சீட்டு விழுந்த நிலையில் வரிகள் போக அவருக்கு 10 கோடி ரூபாய் கிடைத்தது.

China High court
ஆனால் அவர் அந்த லாட்டரி சீட்டு பரிசு விழுந்ததை தனது மனைவியிடம் மறைத்ததாக தெரிகிறது. தானாகவே அந்த பணத்தை செலவு செய்த லீன் என்ற அந்த இளைஞர் அதன் பிறகு தனது முன்னாள் மனைவி வீடு கட்டுவதற்காக சில லட்சங்களை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி அவர் தனது சகோதரிக்காகவும் நண்பர்களுக்காகவும் அந்த பணத்தை செலவு செய்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் மனைவிக்கு இது தெரிய வர அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். லாட்டரி சீட்டு வாங்கியது தங்களுடைய பொதுவான பணம் என்றும் அந்த பரிசில் தனக்கும் 50% உரிமை உள்ளது என்றும் அந்த பரிசு பணத்தை தன்னிடம் இருந்து மறைத்து முன்னாள் மனைவிக்கு செலவு செய்து உள்ளார் என்றும் தன்னுடைய பங்கை தனக்கு தர உத்தரவிட வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் லின் வாங்கிய லாட்டரி சீட்டு பணம் பொதுவான பணம் என்பதால் அதில் 50% மனைவிக்கு சொந்தம் ஒன்றும் என்றும் ஆனால் அவர் தனது உண்மையை மறைத்ததால் அவர் 60% பரிசு பணத்தை தனது மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு லாட்டரி சீட்டு வாங்க பொதுவான பணத்தை பயன்படுத்தியதை அடுத்து அவர் தனியாக அனுபவிக்க விரும்பினார், அதற்கு கிடைத்த பரிசு தான் இது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். 12 கோடி லாட்டரி பரிசு கணவன் மனைவியை இடையே பிளவு ஏற்படுத்தி விட்டது என்று ஒருவர் கமெண்ட் செய்தார். நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு இதுதான் காரணம் என்று இன்னொருவர் நகைச்சுவையாக பதிவு செய்திருந்தார்.

















