Connect with us

தமிழ்நாடு

மில்க் ஷேக், பாயாசம் மிக்ஸ், நூடுல்ஸ்: ஆவினில் கிடைக்கும் ஐந்து புதிய பொருட்கள்!

Published

on

இதுவரை ஆவினில் பால், தயிர், நெய் உள்பட ஒருசில பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது மேலும் 5 பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசின் ஆவின் துறை அறிவித்துள்ளது. இந்த ஐந்து பொருள்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஆவின் உற்பத்தி பொருட்கள் லாபம் ஈட்டக்கூடிய வழிகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆவின் நிறுவனம் 5 புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஆவின் நிறுவனம் பால்கோவா, மைசூர்பாக், ரசகுல்லா போன்ற இனிப்பு பொருட்களை ஏற்கனவே தயாரித்து விற்பனை செய்துவரும் நிலையில் தற்போது பிரிமியர் மில்க் ஷேக் என்ற ஸ்வீட் 250 கிராம் 100 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இனிப்பு வகை தகுந்த பால் பவுடர் மற்றும் ஆவின் நெய் உபயோகம் செய்து தயாரிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

அதேபோல் இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் என்ற மாம்பழம் மற்றும் ஸ்டாபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200ml 25 ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஜீரணசக்தியை மற்றும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

அதே போல் பாயாசம் மிக்ஸ் என்ற உணவுப்பொருள் 100 கிராம் 50 ரூபாய் மற்றும் 200 கிராம் 100 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் மிகுந்த சுவையாக இருக்கும் இந்த பாயாசத்தில் முந்திரி, திராட்சை, பால் பொருட்கள் ஆகியவை கலந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பால் புரத நூடுல்ஸ் என்ற குழந்தைகள் விரும்பும் சுவையில் ஒரு பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. 70 கிராம் 10 ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது மேலும் அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையில் உணவகங்கள் தேநீர் கடைகள் விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு பயணங்களின்போது எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய டெய்ரி ஒயிட்னர் என்ற புது வடிவில் 20 கிராம் 10 ரூபாய், 200 கிராம் 80 ரூபாய், 500 கிராம் 200 ரூபாய் என்ற விலையில் ஆவின் டெய்ரி ஒயிட்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Luxury gulets motor.