கிரிக்கெட்
முதல் டி20 போட்டியில் நடராஜன் இல்லை: அணியில் இடம்பெற்ற வீர்ர்கள் யார் யார்?

இன்று நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி களத்தில் இறங்க தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜாஸ் பட்லர், டேவிட் மலன், ஜான்னி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன், சாம் கர்ரன், ஆர்ச்சர், கிரிஸ் ஜோர்டான், ரஷித் மற்றும் மார்க் வுட்.
இந்தியா: கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், சாஹல்.


















