Connect with us

கிரிக்கெட்

பரபரப்பான இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டி: காத்திருக்கும் சவால்!

Published

on

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா எப்படி கையாள இருக்கிறதோ என்பதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் விக்கெட்டை சீரான இடைவெளியில் வீழ்த்தினர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். இந்தியா தரப்பில் புஜாரா மற்றும் கேப்டன் கோலி மட்டுமே அணியை தூக்கி நிறுத்த போராடினர்.

கோலி, புஜாராவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். ஆனால் 46 ரன்னில் கோலி வெளியேற அதன் பின்னர் வந்தவர்கள் வரிசையாக நடையை கட்டினர். ஆனால் புஜாரா மட்டுமே பாகுபலியை போல இந்திய அணியை காப்பாற்றினார். பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் கூட கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார்.

புஜாராவுடன் கூட்டணி அமைத்த இசாந்த் சர்மா 27 பந்துகளை சந்தித்து 14 ரன் எடுத்தார். அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக வந்த பும்ரா கூட 24 பந்துகளை சந்தித்து 6 ரன் எடுத்தார். ஆனால் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் புஜாரா 132 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 273 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான இன்று சவால் நிறைந்ததாக இருக்கும். இங்கிலாந்து அணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்த இந்தியா முயற்சிக்கும். ஆனால் இந்த மைதானத்தில் கடைசி இன்னிங்ஸில் 150 ரன்னுக்கு மேல் கூட சேஸ் செய்ய கடினமாகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Career spouse. Programs usa top. For class 11th & 12th annual regular 2024, exam forms cancelled.