தமிழ்நாடு
ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட பொறியியல் மாணவி: அதிர்ச்சி காரணம்!

திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய அறையில் தங்கியிருந்த மற்ற மாணவிகள் தமிழ் புத்தாண்டை ஒட்டி ஊருக்கு சென்று விட்ட நிலையில் சௌமியா தேவி மட்டும் தனியாக அறையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாலை அவருடைய தோழிகள் அறைக்கு வந்து கதவை தட்டியபோது திறக்காததால் சந்தேகம் அடைந்த மாணவிகள் கதவை உடைத்து பார்த்தபோது சௌமியா தேவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
முதல் கட்ட விசாரணையில் சௌமியா தேவி இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை தனது காதலரிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து சௌமியா தேவியின் பெற்றோர் மற்றும் காதலரிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















