Connect with us

வணிகம்

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023: சிறப்பு அம்சங்கள்!

Published

on

2022-23 ஆம் ஆண்டுக்கான  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்தார்.   இந்த ஆய்வறிக்கையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

பொருளாதாரம் 2022-23-ன் நிலை: முழுமையான மீட்சி

  • பெருந்தொற்றால் ஏற்பட்ட தொய்வு, ரஷ்யா-உக்ரைன் மோதல், பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து  மீட்சிப் பெற்று   துறைகள் தோறும் விரிந்த தளத்தில் இந்திய பொருளாதாரம் நிதியாண்டு 23–ன் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு முன்னேறி வருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, நிதியாண்டு 24-ல் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நிதியாண்டு 24-க்கான ஜிடிபி மதிப்பீடு 6-6.8 சதவீதம்.
  • நிதியாண்டு 15-க்குப் பின் முதலாவது அரையாண்டில் தனியார் நுகர்வு அதிகபட்சமாக உள்ளது.   இது உற்பத்தி செயல்பாட்டை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.  இதன் காரணமாக, துறைகள் தோறும் திறன் பயன்பாடு விரிவடைந்துள்ளது.
  • மத்திய அரசின் மூலதனச் செலவும் தனியார் மூலதன செலவின்  அதிகரிப்பும், பெருநிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.  இது நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
  • 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் எம்எஸ்எம்இ துறையின் கடன் வளர்ச்சி சராசரியாக 30.6 சதவீதமாக இருந்தது.
  • 2022 நவம்பரில் சில்லறை பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு எல்லைக்குள் இருந்தது.
  • 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் வளர்ந்து வரும் இதர சந்தைப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் இருந்தது.
  • 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் நேரடி வரிவருவாய் தொடர்ந்து மேம்பட்ட நிலையில் இருந்தது.
  • விரிவடைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காரணமாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பதிவு வேகமடைந்துள்ளது.
  • பொது டிஜிட்டல் தளங்கள் விரிவாக்கம் மற்றும் பொருள் உற்பத்திக்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கம்  ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நடுத்தர வளர்ச்சிக் கண்ணோட்டம்: நிச்சயத்தன்மையும் நம்பிக்கையும்

  • இந்திய பொருளாதாரம் விரிவான அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுள்ளது.  இது பொருளாதாரத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தியுள்ளது.  இதன்மூலம் 2014-2022 காலத்தில் ஒட்டுமொத்த திறன்  விரிவாக்கப்பட்டுள்ளது.
  • வாழ்க்கையையும், வணிகம் செய்வதையும் எளிதாக்கி மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாய்ப்புகள், திறன்களை விரிவாக்குவதற்கு பொது சேவைகளை உருவாக்குதல், வாழ்க்கையை எளிதாக்குதல், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வளர்ச்சியில் துணை பங்குதாரராக தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் 2014-க்கு பிந்தைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • 2014-2022 காலத்திற்கு முந்தைய ஆண்டுகளில் கடன் அதிகரிப்பாலும், உலகளாவிய அதிர்வுகளாலும்  வரவு – செலவு அறிக்கைகளில் அழுத்தம் ஏற்பட்டது.  இது கடன் வளர்ச்சி, மூலதன உருவாக்கம், இதே காலத்தில்  பொருளாதார வளர்ச்சி போன்ற பருப்பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் 1998-2002 காலத்திற்கு ஒத்த நிலையில் இருந்ததால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தற்காலிக அதிர்வுகள் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.  இந்த அதிர்வுகள்  மறைந்த பின்  மேற்கொள்ளப்பட்ட  கட்டமைப்பு சீர்திருத்தங்கள் 2003-லிருந்து வளர்ச்சியில்  பலன்களை தந்தன.
  • அதேபோல், பெருந்தொற்றின் உலகளாவிய அதிர்வுகளும் 2022-ல்  அதிகரித்த சரக்குகளின் விலையும் குறையும் போது,  வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நல்ல நிலையில் இருக்கும்.
  • வங்கித் துறை, வங்கி அல்லாத துறை, கார்ப்பரேட் துறைகளின்  வரவு – செலவு அறிக்கைகள் வலுவானதாகவும், மேம்பட்டும் இருப்பதால், புதிய கடன் சுழற்சி ஏற்கனவே தொடங்கியுள்ளது.  இதனால், கடந்த சில மாதங்களில் வங்கிக் கடன் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது.
  • பொருளாதார சீர்திருத்தங்கள் அடிப்படையிலான டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மகத்தான முறைப்படுத்துதல், அதிக அளவிலான நிதி உள்ளடக்கம், பொருளாதார வாய்ப்புகள் காரணமாக இந்திய பொருளாதாரம்  பயனடைய தொடங்கியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை விட, சிறப்பானதாக இருப்பதையும், நடுத்தர நிலையில் தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள இந்திய பொருளாதாரம் தயாராகி வருவதையும் ஆய்வறிக்கையின் அத்தியாயம்-2 காட்டுகிறது.

நிதி மேம்பாடு: வருவாய் அதிகரிப்பு

  • 2023 நிதியாண்டில் மத்திய அரசின் பொருளாதார திட்டங்களின் வெற்றிக்கு பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் நேரடி வரிவிதிப்பிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை முக்கியப் பங்காற்றின.
  • 2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாய் முன்பதிவு 15.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கான நேரடி வரி வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சராசரியாக அதிகரித்திருக்கிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் வளங்கள் ஜிஎஸ்டி மூலம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி  வரிவசூல் 24.8 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
  • இந்த ஆண்டின் உயர் வருவாய் செலவு தேவைக்கு ஏற்ப மத்திய அரசு மூலதன செலவை (சிஏபிஇஎக்ஸ்) நிர்ணயித்திருக்கிறது. மத்திய அரசின் சிஏபிஇஎக்ஸ் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2009 ஆம் நிதியாண்டு முதல் 2020 ஆம் நிதியாண்டு வரையிலான கடந்த கால ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சதவீதம் 2022 ஆம் நிதியாண்டில் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • மாநில அரசுகளுக்கு வட்டியில்லா இலவசக் கடன்கள் மூலம் ஊக்கத் தொகையை மத்திய அரசு அளித்து வருகிறது. அதே போல் வசூலிப்பு இலக்கை நிர்ணயிக்கும் மூலதன செலவீட்டுக்கு முக்கியத்துவம் அளித்தும் வருகிறது.
  • சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே, வீட்டுவசதி. நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றில் மூலதன செலவீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்த முன்வந்துள்ளது.
  • மத்திய அரசின் மூலதன செலவீட்டை அதிகரிக்கும் செயல் திட்டம். இந்தியாவின் வளர்ச்சியை அதிகரித்திருப்பதுடன், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நிலைத்தன்மையை உருவாக்கியிருக்கிறது.

 

நிதி மேலாண்மை மற்றும் நிதிபகிர்வு: சிறந்த வருடம்

  • 2022 ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதி கடுமைப்படுத்துதல் சுற்றை முன்னெடுத்தது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதத்தை 225 புள்ளிகள் அதிகரித்ததன் மூலம் நிதி கையிருப்பில் நவீனத்துவத்திற்கு வழிகோலியது.
  • தெளிவான வரவு-செலவு கணக்கு பொருளாதார நிறுவனங்களின் வளர்ச்சிக்கு திட்டமிட்டது.
  • கடன் தள்ளுபடி வளர்ச்சி நீடித்த மற்றும் நிலையான பொது மூலதன செலவீடுகளுக்கு பயன்பட்டது.
  • உணவு அல்லாத துறைகளுக்கான கடன் தள்ளுபடி மூலம், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளில் வளர்ச்சி விகிதம் 2 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
  • வங்கியில் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் விடுவிப்பு அதிகரித்துள்ளது.
  • ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதாச்சாரம் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளது.
  • முதலீட்டு இடர்பாடுகளுக்கான விகிதாச்சாரம் 16 சதவீதமாகவே நீடிக்கிறது.
  • திவால் நிலையில் உள்ள ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் வரிவசூல் கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022 நிதியாண்டில் அதிகமாக இருந்தது.

விலை நிர்ணயம் மற்றும் பணவீக்கம்: வெற்றிகரமாக பீடுநடை

  • 3 முதல் 4 தசாப்தங்களுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு உலக நாடுகளே அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டன. இந்தியாவில் விலைவாசி அதிகரித்தது.
  • இந்தியாவின் கொள்முதல் பணவீக்க விகிதம் 2022 ஏப்ரல் மாதம் 7.8 சதவீதமாக அதிகரித்தது.
  • விலையை அதிகரிக்க ஏதுவாக மத்திய அரசு பன்நோக்கு அணுகுமுறையை கையாண்டது.

 

  • பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இறக்குமதி வரி பல்வேறு கட்டங்களாக குறைக்கப்பட்டது.
  • முக்கியப் பொருட்களான இறக்குமதி வரி 0 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பலனாக இரும்பு மற்றும் அதன் தாதுக்களின் ஏற்றுமதி 30 முதல் 50 சதவீதம் அதிகரித்தது.
  • பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி தள்ளுபடி 2022 ஏப்ரல் 14-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.
  • கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய எச்.எஸ்.கோடு
    1101-ன் படி தடை விதிக்கப்பட்டது.
  • கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை வரி குறைக்கப்பட்டது.

 

  • ரிசர்வ் வங்கி பணவீக்க எதிர்பார்ப்புகளை சிறந்த வழிகாட்டுதல்கள் மூலமாகவும், சிறப்பான பணக் கொள்கைகள் மூலமாகவும் கையாள்வதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாடான நிலையில் உள்ளது.
  • வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகங்கள் தொடர்பான ஒன்றரை  ஆண்டு கால பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் சராசரி நிலைக்கு வந்துள்ளது.
  • வீட்டுவசதித் துறையில் அரசின் சரியான தலையீடுகள் காரணமாக கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து வீடு வாங்குவோர் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இதன் காரணமாக 2023 ஆம் நிதியாண்டில் குறைந்த விலை வீடுகள் அதிகம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒட்டுமொத்த வீடுகள் விலைக் குறியீட்டு மதிப்பீட்டில் உயர்வு மற்றும் வீட்டு விலைக் குறியீட்டு சந்தை விலைகள் வீட்டுவசதித் துறை மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதை உணர்த்துகிறது. வீடுகள் விலைக் குறியீட்டில் நிலையானது முதல் மிதமானது வரையிலான உயர்வு வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்தியாவின் பணவீக்க மேலாண்மை குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. முன்னேறிய பொருளாதார நாடுகள் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதில் போராடும் நிலையில் இந்தியா சிறப்பான மேலாண்மையை கொண்டுள்ளது.

 

சமூக உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு: பெரிய அளவில்

 

  • சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார துறைக்கான பட்ஜெட் செலவீனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 2023 ஆம் நிதியாண்டில் 2.1 சதவீதத்தை எட்டியுள்ளது. 2021 நிதியாண்டில் 1.6 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு 2.2 சதவீதமாகவும் இருந்தது.
  • முந்தைய 2016 ஆம் நிதியாண்டில் ரூ.9.1 லட்சம் கோடியாக இருந்தது சமூகத் துறைகளுக்கான செலவீனம், 2023 ஆம் நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • யுஎன்டிபி-ன் 2022 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் 2005 – 06 முதல் 2019 – 20 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புறநகர் மற்றும் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் நல்லாட்சியை ஏற்படுத்த மாவட்ட அளவிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய அளவிலான ஆவணங்களை உருவாக்குவதற்காக இ-ஷ்ரம் போர்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்படி 2022 டிசம்பர் 31-ந் தேதி வரை இ-ஷ்ரம் போர்டல் மொத்தம் 28.5 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் எண்களை உள்ளடக்கிய ஜேஏஎம் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களுக்கு உதவும் வகையில் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கு எளிமையான நிதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
  • கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கோ-வின் இணையதள வசதி மூலம் ஆதார் உதவியுடன் 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த வெற்றிக்கு ஆதார் எண்ணின் பங்கு இன்றியமையாதது.
  • கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் கிராமம் மற்றும் நகரங்களில் தொழிலாளர் சந்தைகள் மீட்கப்பட்டன. 2018-19 ஆம் ஆண்டு 5.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மையின் விகிதம் 2020 ஆம் ஆண்டு 4.2 சதவீதமாக குறைந்தது.
  • 2022 நிதியாண்டில் பள்ளியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் 6 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களின் மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.
  • மத்திய அரசு மேற்கொண்ட சுகாதாரத்துறை சார்ந்த நடவடிக்கைகளால் 2014 ஆம் நிதியாண்டில் 64.2 சதவீதமாக இருந்த சுகாதார செலவீனங்கள் 2019 ஆம் ஆண்டு 48.2 சதவீதமாக குறைந்திருக்கிறது.
  • மகப்பேறு இறப்பு விகிதாச்சாரம், 5 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் மற்றும் என்எம்ஆர் இறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்துள்ளது.
  • 2023 ஜனவரி 6-ந் தேதி வரை 220 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • 2023 ஜனவரி 4-ந் தேதி வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 22 கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1.54 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன.

 

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்: எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

 

  • 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான உறுதி மொழியை இந்தியா பிரகடனப்படுத்தியுள்ளது.
  • 2030-ம் ஆண்டுக்கு முன்பாக புதைப்படிம மற்ற  எரிப்பொருளிலிருந்து 40 சதவீத மின்திறனை அடையவேண்டும் என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே எட்டியுள்ளது.
  • 2030-ம் ஆண்டு புதைப்படிம மற்ற மின்சார நிறுவு திறன் 500 ஜிகாவாட்டை எட்டும். இதன் விளைவாக, 2014-15ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2029-30ம் ஆண்டில் சராசரி கார்பன் வெளியேற்றம் 29 சதவீத அளவுக்கு குறையும்.
  • இந்தியா தமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்பன் வெளியேற்ற விகிதத்தை 2005 முதல் 2030ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் குறைக்கும் தீவிரத்துடன் செயல்படுகிறது.
  • 2030ம் ஆண்டுக்குள்  50 சதவீத மின்சக்தியின் நிறுவு திறன் புதைப்படிமமற்ற வளங்களிலிருந்து பெறப்படும்.
  • சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பாக லைஃப் என்ற மிகப்பெரிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இறையாண்மை பசுமைப் பத்திர செயல்திட்டம் 2022 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ரிசர்வ் வங்கி இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கான இறையாண்மை பசுமைப் பத்திரங்களை ஏலம் விடுகிறது.
  •  தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்,  இந்தியாவை 2047ம் ஆண்டுக்குள் எரிச்சக்தி தற்சார்பு நாடாக மாற்ற வகை செய்யும்.
  •  2030ம் ஆண்டுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறன் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். ஒட்டுமொத்தமாக புதைப்படிம இறக்குமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்படுவதுடன், 2030ம் ஆண்டுக்குள் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 125 ஜிகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்படுவதுடன், 2030-க்குள், ஆண்டுக்கு  50 மில்லியன் மெட்ரிக் டன் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும்.
  • இந்த ஆய்வு, பருவநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ் பருவ நிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும், நீடித்த வளர்ச்சிக்காகவும் செயல்படுத்தப்படும் 8 இயக்கங்களின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.
  • தேசிய சூரியசக்தி இயக்கத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் அக்டோபர் 2022-ல் 61.6 ஜிகாவாட்டாக உள்ளது.
  • இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மிகவும் விரும்பப்படும் மையமாக மாறியுள்ளது.  கடந்த 7 ஆண்டுகளில் இதில் 78.1 பில்லியன்  அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்துள்ளது.
  • நீடித்த வளர்ச்சிக்கான தேசிய வாழ்விட இயக்கத்தின் கீழ் (ஆகஸ்ட் 2022) 62.8 லட்சம் தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளும், 6.2 லட்சம் சமுதாயம் மற்றும் பொது கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

 

வேளாண் மற்றும் உணவு மேலாண்மை

  • வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் மிகச்சிறப்பாக உள்ளது. பயிர் மற்றும் கால்நடை வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு எடுத்து நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மேம்படுத்த உத்வேகம் அளிக்கப்படுகிறது. விவசாய உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது.
  • 2021ம் நிதியாண்டில் வேளாண்மையில் தனியார் முதலீடு 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2010ம் ஆண்டு முதல் பயிர்களுக்கு அதன் சராசரி உற்பத்திசெலவில் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • 2021-22ம் ஆண்டில் வேளாண் துறைக்கான நிறுவனக் கடன்கள் தொடர்ந்து உயர்ந்து 18.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
  • 2021-22ம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி  நிலையான வளர்ச்சியை பெற்று 315.7 மில்லியன் டன்னாக இருந்தது.
  • ஜனவரி-1, 2023ல் இருந்து ஓராண்டுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 81.4 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏப்ரல் – ஜூலை  2022-23 காலகட்டத்தில் 11.3 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் அறுவடைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் சமூகப் பண்ணைகளுக்காக  13 ஆயிரத்து 681 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போட்டித்தன்மையுடன் கூடிய, வெளிப்படைத் தன்மையுடைய, இணையதள ஏல நடைமுறையில் இ-நாம் திட்டத்தில் ஒருகோடியே 74 லட்சம் விவசாயிகளும் 2 லட்சத்து 30 ஆயிரம் வியபாரிகளும், இணைந்துள்ளனர்.
  • பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம், இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.
  • சர்வதேச சிறுதானிய ஆண்டு முன்முயற்சியின் கீழ் சிறுதானியங்களை ஊக்குவிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

 

தொழில் துறை:  நிலையான மீண்டெழும் தன்மை

  • தொழில் துறையின் மூலம் 2022 -23ம் நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதல் விகிதம் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சியான 2.8 சதவீதத்தை விட, இது அதிகமாகும்.
  • தனியார் இறுதி நுகர்வு செலவில் மிகப்பெரிய வளர்ச்சி, நிதியாண்டின் முதல் பாதியில் வலுவான ஏற்றுமதி, பொது மூலதனச் செலவால் முதலீட்டு தேவை அதிகரிப்பு, வலுவான வங்கி கட்டமைப்பு மற்றும்  பெரு நிறுவனங்களில் மேம்பட்ட வரவு – செலவு இருப்பு நிலைகள், தொழில் துறை வளர்ச்சிக்கான ஊக்கத்தை வழங்கியுள்ளன.
  • தொழில் துறைக்குத் தேவையான விநியோகங்களும் வலுவான நிலையில் உள்ளன.
  • கொள்முதல் மேலாண்மை குறியீடு கடந்த 18 மாதங்களில் அதாவது ஜூலை 2021 முதல் விரிவடைந்த நிலையிலேயே உள்ளது.  மேலும் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள்  ஜனவரி 2022 முதல் சராசரியாக 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன. அக்டோபர் 2022 முதல் பெரு நிறுவனங்களுக்கான கடன்கள் இரட்டை  இலக்க சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.
  • மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 2019ம் நிதியாண்டில் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது, 2022ம் நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 11.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • உலக அளவில் மொபைல் ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. 2015ம் நிதியாண்டில், 6 கோடியாக இருந்த மொபைல் ஃபோன் உற்பத்தி 2021-ம் நிதியாண்டில் 29 கோடியாக அதிகரித்துள்ளது.
  • மருந்து உற்பத்தித் துறையில்  2019ம் நிதியாண்டில் 180 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2022ம் நிதியாண்டில் 4 மடங்கு அதிகரித்து, 699 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  •  உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 14 பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவின் அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-ம் நிதியாண்டில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தில் 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்  முதலீடு பெறப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டுக்கான இலக்கில் 106 சதவீதமகும். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றுள்ளதுடன், 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
  • 2023 ஜனவரி வரை 39 ஆயிரம் சிக்கல்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், 3500க்கும் மேற்பட்ட வகைகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன.

 

சேவைகள்: வலிமையின் ஆதாரம்

• கடந்த நிதியாண்டில் 8.4  சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்த சேவைத்துறை, இந்த நிதியாண்டில் 9.1  சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• கடந்த ஜூலை 2022 முதல் கொள்முதல் மேலாண்மைக் குறியீடு சேவைகளில் வலிமையான விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் சேவைத் துறையின் செயல்பாட்டைத் தெளிவாக உணர முடிகிறது.

• கடந்த 2021 ஆம் ஆண்டில் சேவைத்துறை சார்ந்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் பத்து இடத்தில் இந்தியாவும் இருந்தது.  உலக வர்த்தக சேவைகள் ஏற்றுமதியில் அதன் பங்கு 2015-ல் 3 சதவீதத்திலிருந்து  2021-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

• கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திலும், டிஜிட்டல் மயமாக்கல், தொலைநிலை சேவையகங்கள், உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் போன்றவற்றின் தேவைகள் அதிகரித்ததன் விளைவாக புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு வித்திட்ட நிலையிலும், இந்தியாவின் சேவைத்துறையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தன.

• கடந்த ஜூலை 2022 முதல் சேவைத் துறைக்கான வரவினம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

• கடந்த நிதியாண்டில் சேவைத் துறையில் அமெரிக்க டாலர் மதிப்பில் 7.1  பில்லியன் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு வரவு.

• இந்த நிதியாண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதங்களை மீட்டெடுக்க தொடர்பு-தீவிர சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

• ரியல் எஸ்டேட் துறையில் நிலையான வளர்ச்சி. கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டத்திற்கு இடையில் 50 சதவீத வளர்ச்சியுடன், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்ட நிலைகளுக்கு வீட்டு விற்பனையைக் கொண்டு சென்றுள்ளது.

• விடுதிகளில் குடியிருப்போர் விகிதம் ஏப்ரல் 2021-ல் 30-32 சதவீதமாக இருந்த நிலையில், அது நவம்பர் 2022-ல் 68-70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

• சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகளைக் காண முடிகிறது. சர்வதேச விமானச்சேவை மீண்டும் தொடக்கம் மற்றும் கொவிட்-19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

• டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்தியாவின் நிதிச் சேவைகள் மாற்றம் கண்டுள்ளது.

• இந்தியாவின் மின்னணு வர்த்தகச் சந்தை 2025 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 18 சதவிகிதம் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிப் பிரிவு

• ஏப்ரல்-டிசம்பர் 2022-ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்க டாலர் மதிப்பில்  332.8 பில்லியன் ஆக இருந்தது.

• இந்தியாவின் வர்த்தகச் சந்தைகளை பன்முகப்படுத்தல் மற்றும் அதன் ஏற்றுமதியை பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அதிகரிக்க செய்தது.

 

•வர்த்தகச் சந்தை அளவை அதிகரிக்கவும், சிறந்த வகையிலான முன்னெடுப்புகளை உறுதிப்படுத்தவும், 2022-ல், ஐக்கிய அரபு அமீரகத்துடன் விரிவான பொருளாதாரக் கூட்டு உடன்படிக்கை மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக உடன்படிக்கை ஆகியவை நடைமுறைக்கு வருகின்றன.

• கடந்த 2022 ஆம் ஆண்டில் உலக அளவில்  இந்தியா அதிக அளவில் பணப்பரிமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியனைப் பெறும்  நாடு இந்தியாதான். சேவை ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு நிதியுதவியின் இரண்டாவது பெரிய ஆதாரமாகப் பணப்பரிமாற்றம் திகழ்கிறது.

• டிசம்பர் 2022  நிலவரப்படி, அந்நியச் செலாவணிக் கையிருப்பு  9.3 மாத இறக்குமதியை உள்ளடக்கி  அமெரிக்க டாலர் மதிப்பில் 563 பில்லியன் ஆகும்.

• கடந்த 2022 நவம்பர் இறுதி நிலவரப்படி, உலகின் ஆறாவது பெரிய அந்நியச் செலாவணி இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

• வெளிநாட்டுக் கடனின் தற்போதையக் கையிருப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பின் மூலமாக பாதுகாப்பான நிலையில் உள்ளது.

• இந்தியா ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே மொத்தக் கடனைக் கொண்டுள்ளது. மொத்த தேசிய வருமானத்தின் சதவீதமாகவும், குறுகிய காலக் கடனை மொத்தக் கடனின் சதவீதமாகவும் இந்தியா கொண்டு உள்ளது

செயல்பாடு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் நோக்கம்

 

• அரசு-தனியார் கூட்டாண்மை

o சாத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ், 2014-15 முதல் 2022-23 வரை, மொத்த திட்டச் செலவு ₹57,870.1 கோடியுடன் 56 திட்டங்களுக்கு முதன்மை ஒப்புதல் வழங்கப்பட்டது.

நிதியாண்டு 23-25 முதல் ₹150 கோடி செலவில் இந்திய உள்கட்டமைப்புத்  திட்ட மேம்பாட்டு நிதித்  திட்டம் 03 நவம்பர் 2022 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

• தேசிய உள்கட்டமைப்புத் திட்டம்

o 141.4 லட்சம் கோடி செலவில் 89,151 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன

5.5 லட்சம் கோடி மதிப்பிலான 1009 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன

தேசிய உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் திட்டக் கண்காணிப்புக் குழு வலைதள இணைப்புகளை விரைவாக செயல்படுத்துவதற்கான ஒப்புதல்கள் / திட்டங்களுக்கான அனுமதிகள்

• தேசிய பணமாக்கத் திட்டம்

₹ 9.0 லட்சம் கோடி என்பது மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டுத் திறன்.

கடந்த நிதியாண்டு 22ல் எதிர்பார்க்கப்பட்ட ₹0.8 லட்சம் கோடிக்கு மாறாக ₹ 0.9 லட்சம் கோடி பணமாக்குதல் இலக்கு எட்டப்பட்டது.

இந்த நிதியாண்டின் இலக்கு ₹1.6 லட்சம் கோடி (ஒட்டுமொத்த தேசிய பணமாக்க திட்டத்தின் இலக்கில் 27 சதவீதம்)

• விரைவு சக்தி (கதிசக்தி)

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், அமைச்சகங்கள்/ துறைகள் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கத்திற்கான விரிவான தரவுத்தளத்தை உருவாக்குகிறது.

பொது மக்கள் மற்றும் சேவைப் பொருட்களின் தடையற்ற இயக்கத்திற்கான முக்கியமான இடைவெளிகளை சரி செய்யும் போது பல்முனை இணைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

எரிசக்தித் துறை மற்றும் புதுப்பிக்கத்த எரிசக்தித்துறை

• 30 செப்டம்பர் 2022 நிலவரப்படி, 16 மாநிலங்களில் 59 சூரியஒளி மின் உற்பத்திப் பூங்காக்களை மேம்படுத்த 40 ஜிகாவாட் என்ற முழு இலக்குத் திறனையும் அடைய மத்திய அரசு ஒப்புதல்.

• நிதியாண்டில் 17.2 லட்சம் ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, இது கடந்த 2021 நிதியாண்டில், 15.9 லட்சம் GWh ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி ஆக இருந்தது.

• நிறுவப்பட்ட மொத்த மின் திறன் (1 மெகா வாட்  மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் தொழில்துறைகள்) 31 மார்ச் 2021 அன்று 460.7 ஜிகாவாட்- லிருந்து 31 மார்ச் 2022 அன்று 482.2 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் இந்திய சரக்குப்போக்குவரத்துத் துறையில்  போட்டிபோடும் நிலையை ஏற்படுத்துதல்

• தேசிய சரக்குப்போக்குவரத்துக் கொள்கையானது, விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு-திறனுள்ள, மீள்திறன், நிலையான மற்றும் நம்பகமான சரக்குப்போக்குவரத்துச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

• தேசிய நெடுஞ்சாலைகளின்  வேகமான அதிகரிப்பு /  கடந்த 2016 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள்   6061  கிலோ மீட்டர் அளவில் இருந்த நிலையில் 2022 நிதியாண்டில் சாலைகள் 10457 கிலோ மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது.

• பட்ஜெட் செலவினம் 2020  நிதியாண்டில் ₹1.4 லட்சம் கோடியிலிருந்து ₹2.4  லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மூலதனச் செலவினங்களுக்குப் புத்துயிர் அளிக்கப்படும் விதமாக உள்ளது.

அக்டோபர் 2022  நிலவரப்படி, 2359 வேளாண் ரயில் போக்குவரத்து மூலம் ஏறத்தாழ 7.91 லட்சம் டன்கள் எளிதில் அழுகிப் போகக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லப்பட்டது.

• 2016 இல் தொடங்கப்பட்ட உதான் திட்டத்தின் பலனை ஒரு கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பெற்றனர்.

• 8 ஆண்டுகளில் பெரிய துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகும்.

 

• உள்நாட்டு கப்பல்கள் போக்குவரத்துச் சட்டம் 2021, உள்நாட்டு நீர் போக்குவரத்தை ஊக்குவிக்கும் கப்பல்களின் இடையூறு இல்லாத இயக்கத்தை உறுதி செய்வதற்காக 100 ஆண்டுகள் பழமையான சட்டம் திருத்தப்பட்டது.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு

• ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம்

o ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம் -அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் மதிப்பு (121 சதவீதம்) மற்றும் தொகுதி அளவில் (115 சதவீதம்) 2019-22 க்கு காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்தது. அதன் விளைவாக சர்வதேச அளவில் பயன்படுத்த வழி வகுத்தது.

• தொலைபேசி மற்றும் வானொலி – டிஜிட்டல் அதிகாரமளித்தல்

இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.8 கோடியாக உள்ளது (செப்.,22 வரை), கிராமப்புற இந்தியாவில் 44.3 சதவீத சந்தாதாரர்கள் உள்ளனர்.

மொத்த தொலைபேசி சந்தாதாரர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் கம்பியில்லா தொலைபேசி (வயர்லெஸ்) மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 22 இல் இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு தொகுதி 84.8 சதவீதமாக இருந்தது.

 

o 2015 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில்  கிராமப்புற இணைய சந்தாக்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளன.

பிரசார் பாரதி (இந்தியாவின் தன்னாட்சி பொதுச் சேவை ஒளிபரப்பு அமைப்பு) – 479 நிலையங்களில் இருந்து 23 மொழிகளில், 179  வட்டார வழக்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. அதன் சேவை பரப்பளவில் 92 சதவீதத்தையும் மொத்த மக்கள் தொகையில் 99.1 சதவீதத்தையும் அடைகிறது.

• டிஜிட்டல் பொது பொருட்கள்

o 2009 இல் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்த செலவில் சேவைகளை அணுகிப் பெறும் நிலை அடைந்துள்ளது

o அரசு திட்டங்களின் கீழ், MyScheme, TrEDS, GEM, e-NAM, UMANG ஆகியவை வர்த்தக சந்தைப் பகுதிகளை மாற்றியமைத்து, பொது மக்கள் பல்வேறு துறைகளில் சேவைகளை அணுகுவதற்கு உதவியுள்ளன.

o கணக்கு நிறுவன தகவல்களை வழங்குபவரின் கீழ், ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வு கட்டமைப்பு தற்போது 110 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் உள்ளது.

o ஓபன் கிரெடிட் இனேபிள்மென்ட் நெட்வொர்க், எண்ட்-டு-எண்ட் டிஜிட்டல் கடன் விண்ணப்பங்களை ஏற்கும்  அதே வேளையில், கடன் வழங்கும் செயல்பாடுகளை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய செயற்கை நுண்ணறிவு வலைதளம் மூலம் 1520  கட்டுரைகள், 262 வீடியோக்கள் மற்றும் 120 அரசின்  முன்முயற்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் மொழி சார்ந்த தடையை கடப்பதற்கான ஒரு கருவியாக செயல்படுகிறது எடுத்துக்காட்டு: ‘பாஷினி’.

o மேம்படுத்தப்பட்ட பயனாளிகளின் தனியுரிமைக்காகவும், நிலையான, வெளிப்படையாக  இயங்கக்கூடிய நெறிமுறைகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காகவும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன

சினிமா செய்திகள்2 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்3 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்3 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்3 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா6 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு7 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized8 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு9 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா12 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு12 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!