சினிமா
இவங்களுக்கு மேல ஒருத்தன் இருக்கான்!.. பட்டைய கிளப்பும் ‘டாக்டர்’ டிரெய்லர் வீடியோ…
Published
1 year agoon
By
ராஜேஷ்
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா? அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்ற குழப்பமான நிலை நீடித்து வந்தது.
மேலும் யூடியூப் சேனல் நடத்திவரும் ஒரு சிலர் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்தாகி விட்டது என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார்கள். ஆனால் இந்த படம் ரிலீஸ் குறித்த எந்த தகவலையும் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தது.
ஒருவழியாக இப்படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிலரை சேர்த்து ஒரு கும்பலாக மாற்றி குழந்தைகளை திருடி கிட்னி திருடும் கும்பலுக்கு தலைவன் போல் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படத்தில் அவர் நல்லவரா கெட்டவரா என்பது படத்தை பார்த்தால்தான் தெரிய வரும்.
You may like
-
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!
-
பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற டைட்டில்: ‘எஸ்கே 20’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ!
-
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட்!
-
இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் டுவிட்
-
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்!
-
சிவகார்த்திகேயன் பாதைக்கு வாங்க: அஜித், விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்