Connect with us

சினிமா

நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது: பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published

on

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியான திமுகவின் தலையீடு உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார், ராதாரவி அணிக்கு எதிராக மல்லுக்கட்டிய விஷால், நாசர் அணி வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் மூலம் ஒரு தலைவர், இரண்டு உப தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் விஷால் அணி சார்பில், நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மேலும் ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் விஷாலுக்கு எதிராக புதிய அணி சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்ட பிரபல நடிகர் ராதாரவி நடிகர் சங்க தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் அணியை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டிவருகிறேன். ஆனால், ராதாரவி சொல்பவருக்கு ஆதரவாக பணியாற்றக் கூடாது, அப்படி பணியாற்றினால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று திமுக தலைமைக் கழகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். பிறகுதான் அது பூச்சி முருகன் என்று தெரிந்தது.

இந்த சிறிய தேர்தலுக்கு பெரிய கட்சி தலையிடுகிறது. அதனால் என்னை திமுகவிலிருந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ராதாரவி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா8 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா8 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்12 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு22 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Salsiccia e porcini | la bodega 77. Private jet charter, ultra long range jets. Vancouver city and harbour waterfront sightseeing boat tour mjm travel.