Connect with us

தமிழ்நாடு

கைது பயம்: முன் ஜாமீன் கேட்கும் பா.ரஞ்சித்!

Published

on

மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இவ்வாறு பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் விவாதத்தையும் இது ஏற்படுத்தியது. இதனையடுத்து பா.ரஞ்சித்துக்கு எதிராக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் விவாதம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா தாமாக முன்வந்து இந்த வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

இதனால் பா.ரஞ்சித் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன். எனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். ஆகவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் திருவாய்ப்பாடி பகுதியில், பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்த திருப்பனந்தாள் காவல் துறையினரை கண்டிக்கும் வகையில் நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போலீசார் செயல்படுவதாகவும், பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்17 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா18 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
本公司提供遍及全港各區的 上門電腦維修 服務,致力於為客戶提供優質的服務。對於偏遠地區,我們將根據具體情況提供額外收費,並在報價時詳細說明。我們的目標是確保客戶能夠享受到完善的維修服務,無論身在何處。.