தமிழ்நாடு
27 முதல் 33 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும்: புதிய கருத்துக்கணிப்பு!

தேர்தல் வந்துவிட்டாலே யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி, எந்த கூட்டணி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டு தான் இருக்கும். ஏறகனவே ரிபப்ளிக், சி வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள் தமிழக நிலவரம் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ள நிலையில் தற்போது மக்கள் தொடர்பகம் அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
லயோலா கல்லூரி முன்னள் மாணவர்களின் மக்கள் தொடர்பகம் மார்ச் 17 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுவையில் 21464 பேரிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த கருத்துக்கணிப்பில், திமுக காங்கிரஸ் கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், அதிமுக பாஜக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், தினகரனின் அமமுக 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஓரிரு தொகுதிகளில் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 18 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 இடங்களில் வெற்றி பெறும் எனவும், அதிமுக 2 முதல் 3 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், தினகரனின் அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.


















