சினிமா செய்திகள்
35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ராமாயண ராமர் – சீதை நடிகைகள்..!

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் டிடி தொலைக்காட்சியில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது என்பதும் அன்றைய 80கள் கிட்ஸ்களுக்கு இந்த ராமாயணம் சீரியல் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான அனுபவமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் ராமர் கேரக்டரில் அருண் கோவில் என்பவரும் சீதை கேரக்டரில் தீபிகா என்பவரும் நடித்திருந்தனர் என்பதும் இந்த ஜோடியை பார்க்கும்போது உண்மையாகவே ராமர் சீதையை பார்த்தது போன்ற உணர்வு இருப்பதாக பலர் அந்த காலத்தில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1987 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 1988 ஆம் ஆண்டு முடிந்தது என்பதும் அதன் பிறகு சமீபத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது மீண்டும் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராமாயண சீரியலில் ராமர் மற்றும் சீதையாக நடித்த அருண் கோவில் மற்றும் தீபிகா 35 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பிரதாப் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் தான் இருவரும் நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்தின் கதை ராமாயணத்தின் நவீன கால தழுவல் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா கூறிய போது ’ஒரு பலவீனமான மனிதன் உண்மைக்காக போராடும் நிலையில் அந்த மனிதனை ஊழல் நிர்வாகம் எந்த அளவுக்கு ஆட்டி படைக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை என்று தெரிவித்தார். ராமாயணம் மகாபாரத்தில் இருந்து பல கதைகள் உருவாகின்றன என்றும் அப்படி உருவான ஒரு கதை தான் இந்த படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
35 ஆண்டுகள் கழித்து தீபிகாவுடன் மீண்டும் நடிப்பது குறித்து அருண் தெரிவித்த போது ’அவருடன் மீண்டும் பணியாற்றுவது எனக்கு அருமையாக அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன், நீதிக்காக போராடும் ஒரு சாதாரண மனிதன் கேரக்டரில் நடிக்கிறேன். கதாபாத்திரத்தில் உண்மையும் தர்மமும் இருப்பதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தீபிகா இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறுகையில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் எளிமையான ஒரு குடும்பப் பெண் கேரக்டர் என்றும் ராமாயணத்தை போலவே இந்த படமும் பார்வையாளர்களை கவரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அருண் மற்றும் தீபிகா இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.