சினிமா செய்திகள்
தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கைக்கு தர்பார் படத்தில் வாய்ப்பு!

தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா, தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு சீனுராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஸ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் நர்ஸாக நடித்திருந்த திருநங்கை ஜீவா, அர்புதமான அர்பணிப்பு, திருதாய் அவளே போன்ற பல குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தில் ஒரு ரோலில் ஜீவா நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட சீனுராமசாமி,
“தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று, இன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கையர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

















