சினிமா செய்திகள்
நான் இப்பவும் யூத் தான் – பிக்பாஸ் ஷெரினின் ஹாட் புகைப்படங்கள்!

நடிகர் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான நடிகை ஷெரின், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை ஷெரின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

பெங்களூரில் பிறந்த ஷெரினுக்கு தற்போது 33வயதாகிறது. இந்த முறை பிக்பாஸ் கிட்டத்தட்ட ஓல்டு ஏஜ் ஹோம் போலவே உள்ளது என்பது தான் உண்மை.

இந்நிலையில், தான் இப்பவும் யூத் தான், என நிரூபிக்கும் வகையில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களையும், படுகவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களையும் ஷெரின் வெளியிட்டு தனக்கென ஒரு ஆர்மியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு ஷெரின் நடிப்பில் வெளியான விசில் படம் மட்டுமே அவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பை தந்தது. அதற்கு பிறகு, உற்சாகம் படத்தில் நாயகியாக நடித்தார் அந்த படம் ஓடவே இல்லை. பின்னர், பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா பாடலுக்கு மட்டும் நடனமாடினார். சினிமாவில் தனக்கான இடம் கிடைக்காத நிலையில், நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகவும் இறங்கி நடித்த ஷெரினுக்கு அதற்கு பிறகும் வாய்ப்புகள் கிட்டவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாவது பிரபலம் ஆகலாம் என்ற நோக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

















