சினிமா செய்திகள்
Dhanush wishes to Kavin: டாடா படம் பார்த்து பாராட்டிய தனுஷ்!

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் “டாடா தி அப்பா”. கடந்த 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நாளுக்கு நாள் டாடா திரையிடப்படும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகமாயது, டாடா பழக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அந்த வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த கவினுக்கு, பொதுமக்களை தாண்டி நடிகர் தனுஷும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
A fine moment to cherish forever 🙂
Thanks a lot @dhanushkraja sir 🙏🏼♥️ pic.twitter.com/XDqI9HV1jh— Kavin (@Kavin_m_0431) February 21, 2023
டாடா திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷிடம் இருந்து அழைப்பைப் பெறுவது உண்மையில் ஒரு அதிசயமான தருணமாக இருந்தது என்று கவின் கூறியிருந்தார் . தனுஷின் எல்லா திரைப்படங்களையும் திரையில் பார்த்தது நினைவுள்ளதாகவும் அவரின் சிறந்த திறமையைக் கண்டு மீண்டும் மீண்டும் வியந்ததாகவும் தெரிவித்திருந்தார். வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டியதற்காக தனுஷ் மீது மிகுந்த மரியாதை என்று கூறி, வாத்தி திரைப்படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார் கவின்.
சமீபத்தில் நடிகர் சூரி டாடா படம் பார்த்து விட்டு அதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில் கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் மனத்திற்கு மிகவும் நிறைவாக உள்ளது. ஆரம்பம் முதல் முடிவு வரை செல்ஃபோனை பார்க்காமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ஒரு படம். “எப்படி பல இடங்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைத்தார்களோ, அதே போல் படத்தின் இறுதியில் கண்ணீர் வரும் அளவுக்கு அழவும் வைத்தார்கள்” இவ்வாறு அவர் படம் குறித்து பாராட்டி இருந்தார்.