Connect with us

இந்தியா

‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கம் நீக்கம் எதிரொலி! வருத்தம் தெரிவித்த பேஸ்புக்

Published

on

delhi farmers protest

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தொடங்கிய ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ எனும் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டம் 4வது வாரமாக நீடித்து வருகிறது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக, மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பிரதமர் மோடி தமிழில் டுவிட்.. வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை படிக்கனுமாம்!

இந் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. இந்த பக்கத்தின் வழியாக போராட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த பக்கத்தை சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதே போன்று இன்ஸ்டாகிராம் பக்கமும் நீக்கப்பட்டு உள்ளது.

போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பி வந்தார்.

வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவர் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பர் என்றும் கூறி இருந்தார். அதன் பிறகே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வருத்தம் தெரிவித்த பேஸ்புக்

பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, ஞாயிறு (டிச.20) மாலை சமூக தளங்கள் வாயிலாக பரவ, பலதரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம், தடை செய்யப்பட்ட விவசாயிகளின் கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாகவும், தடங்கலுக்கு வருந்துவதாகவும் பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்6 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்17 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

ஆரோக்கியம்3 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

Translate »
Market report archives coconut point residences. Best car transport companies. car transport companies.