தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டும் முன்ஜாமின் ரத்து!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்த ஒருவர் மன்னிப்பு கேட்டும் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
திருவண்ணாமலை ஆரணி என்ற பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்தார்.
இதனை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிபதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த. இந்த் முன்ஜாமின் மனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் செந்தில்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால் செந்தில்குமார் தன்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் செந்தில்குமார் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.