தமிழ்நாடு
பலாத்காரம் செய்து கிணற்றி வீசப்பட்ட 10 வயது சிறுமி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கிணற்றி வீசி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கிணறு ஒன்றில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமியிடன் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுமியை பிரேத பரிசோதனை செய்ததில் அவரை பல பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய்க்கு கருணைத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















