தமிழ்நாடு
திமுக ஹேஷ்டேக் இல்லாமல் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய தயாநிதி மாறன்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சற்றுமுன் ராகுல் காந்தி அவர்கள் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாநிதி மாறன்
இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதிமாறன், முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: மக்கள் நலனை மட்டுமே தம் லட்சியமாகக் கொண்டு, அயராது பாடுபடும் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ்ந்திட, வாகைகள் சூடிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இந்நாளில், தமிழகம் தலைநிமிரவும் தலைவர் தளபதி தலைமையில் நல்லாட்சி மலரவும் சபதம் ஏற்போம்! சாதனை படைப்போம்! என்று கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் தனது வாழ்த்து டுவிட்டில் திமுக ஐடி குழுவினர் கொடுத்த #DMK மற்றும் #MKStalin ஆகிய ஹேஷ்டேக்குகளை அவர் தனது டுவிட்டில் பயன்படுத்த முடியாது என்று மறுத்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
மக்கள் நலனை மட்டுமே தம் லட்சியமாகக் கொண்டு, அயராது பாடுபடும் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ்ந்திட, வாகைகள் சூடிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இந்நாளில், தமிழகம் தலைநிமிரவும் தலைவர் தளபதி தலைமையில் நல்லாட்சி மலரவும் சபதம் ஏற்போம்! சாதனை படைப்போம்! pic.twitter.com/ymdt886NZ4
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) March 1, 2021




















