கிரிக்கெட்
IPL- ஐதரபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர் நீக்கம்!

கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை நடப்பு சீசனில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி, தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னர். அவர் தான் கடந்த சில சீசன்களாக ஐதராபாத்தின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் ஐதராபாத் ஒருமுறை கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், இந்த முறை தனிப்பட்ட முறையிலும் ஒரு அணியாகவும் ஐதராபாத்தை வலுவாக வழி நடத்தாத காரணத்தால், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.
???? Announcement ???? pic.twitter.com/B9tBDWwzHe
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2021
இது குறித்து ஐதராபாத் அணி, ‘இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவார். மேலும் வரும் போட்டிகளில் இருந்து வெளிநாட்டு வீரர்களின் காம்போவை மாற்ற உள்ளோம்.
டேவிட் வார்னர், எங்கள் அணிக்கு நிறைய செய்திருக்கிறார் என்பதை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் வரும் போட்டிகளிலும் எங்கள் அணிக்கு முழு ஆதரவு கொடுப்பார் என நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.













