பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: ஐசிசி அளித்த சூப்பர் தகவல்

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதும் இந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய விளையாட்டு போட்டிகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்த முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டை சேர்க்கும் திட்டம் இருப்பதாகவும் 2028 லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலக்காக வைத்து முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது
2024 ஆம் ஆண்டு பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் கிரிக்கெட்டை சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.