இந்தியா
ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற உதவி காவல் ஆய்வாளர் இப்படிப்பட்டவரா? மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்!

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபாதாஸ் அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கோபால் தாஸின் மனைவி கூறிய திடுக்கிடும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா அமைச்சர் நபாதாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது அவரை சுட்ட கோபால் தாஸ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறார். சமீபத்தில் தான் தனது மனைவிம் மகன் மற்றும் மகளுடன் புது வீட்டிற்கு சென்ற கோபால்தாஸ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களாக அவருக்கு உளவியல் பிரச்சனை இருந்ததாகவும் அவர் தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கோபால் தாச் மனிஅவி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலை காவல் துறையினர் உறுதி செய்யவில்லை.
கடந்த 2019 ஆம் ஆண்டு வரை கோபால்தாஸ் தனியார் மருத்துவமனையில் உளவியல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்ததால் அவர் ரெகுலராக சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சில சமயம் மருந்துகள் அவருக்கு வாங்கி கொடுப்போம் என்றும் ஆனால் கடந்த நான்கு மாதங்களாக அவர் விடுமுறை கேட்டும் அதிகாரிகள் விடுமுறை அளிக்காததால் தான் அவரால் சிகிச்சை தொடர முடியாமல் இருந்ததாகவும் கோபால்தாஸ் மனைவி தெரிவித்துள்ளார்.
உளவியல் பிரச்சனைக்காக கோபால்தாஸ் சிகிச்சை பெற்று வந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் உளவியல் பிரச்சினை காரணமாக தான் அமைச்சர் நபாதாசை அவர் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்க மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் கோபால்தாஸ் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் முழுமையான விசாரணைக்கு பிறகு அவர் உளவியல் பிரச்சனைகளில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.