இந்தியா
அதானி குழுமத்திற்கு ரூ.7000 கோடி கடன் கொடுத்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி.. என்ன ஆகும்?

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம். ஏற்கனவே அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த குழுமத்திற்கு கடன் வழங்கி உள்ள வங்கிகளும் மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அதானி குழுமத்திற்கு கோடி கணக்கில் கடன் கொடுத்துள்ள நிலையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7000 கோடி கடன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கோயல் அவர்கள் கூறியபோது அதான குழுமத்திற்கு மட்டும் ரூ.7000 கோடி கடன் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ள அவர் ஆனால் அதே நேரத்தில் நாங்கள் கொடுத்த கடன் திரும்பி வராது என்ற கவலை தங்களுக்கு இல்லை என்றும் அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டர்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#image_title
ரூ.7000 கோடியில் சுமார் 2500 கோடி ரூபாய் அதானியின் விமான நிலைய வணிகத்துடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் அதானி குழுமத்தை தொடர்ந்து ஆதரித்து வருவோம் என்றும் அதானி குழுமம் பணத்தை திரும்ப செலுத்தாத முடியாத நிலையில் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொடுத்த ரூ.7000 கோடி கடன் என்பது கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் இந்த குழுமத்தின் எட்டு நிறுவனங்களுக்கு பரவலாக இந்த கடன் கொடுக்கப்பட்டுள்ளதால் கடன் பணம் திரும்பி வருவதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் இன்னும் ஓரிரு நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு என்பது நின்றுவிடும் என்றும், அதன் பிறகு மீண்டும் ஏற்றம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அதானி குழுமத்திற்கும் ஹிண்டர்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே நிலவி வரும் மோதல் சூழ்நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கோயல் தெரிவித்தார். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுமென்றே செய்த நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்த அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட நடவடிக்கை என்றும் கண்டிப்பாக அதானி குழுமம் இதிலிருந்து மீண்டு வருமென்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த ரூ.7000 கோடி கடனில் 6300 கோடி கடன் நிதி அடிப்படையில் ஆனது என்றும் மீதமுள்ளவை மட்டுமே நிதி அல்லாதவை என்றும் எந்த ஒரு அதானி குழுமத்தின் பங்கு உறுதிமொழியில் பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி உதவி செய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.