Connect with us

செய்திகள்

திருப்பதியில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை

Published

on

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) இனி சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் (IAS) தெரிவித்தார்.

77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

உலகப் புகழ்பெற்ற தார்மீக அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், சாமானிய பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், அதில் 28 மாநிலங்களைச் சேர்ந்த 6,976 கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் என்றும் தெரிவித்தார்.

முதன்முறையாக இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு முதல் 3 நாட்கள் குலுக்கல் முறையில் ஆன்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, சிறப்பான தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 7 நாட்களும் முழுமையாக சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என்றும் கூறினார்.

இந்த 10 நாட்களில் மொத்தமாக 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அதேபோல் ரத சப்தமி விழாவின் போது சுமார் 3 லட்சம் பக்தர்கள் வாகன சேவைகளை கண்டுகளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

1985-ஆம் ஆண்டு முதல் முறையாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கத் தொடங்கியதாக கூறிய அனில் குமார் சிங்கால், தற்போது தினமும் சராசரியாக 2 லட்சம் பக்தர்களுக்கு தரமான அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக விளக்கினார்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.சி., எஸ்.டி., பி.சி. காலனிகளில் 5,000 ஸ்ரீநிவாசர் திருக்கோயில்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோயம்புத்தூர், மும்பை, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட இடங்களில் வரும் ஜூன் மாதத்திற்குள் ஏழுமலையான் கோயில்கள் கட்ட பூமி பூஜை நடைபெற உள்ளதாக கூறினார். கோயம்புத்தூரில் ரூ.300 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட ஒரு பக்தர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அலிபிரி அருகே ரூ.460 கோடி செலவில் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பாக பணியாற்றிய 31 தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் 266 ஊழியர்களுக்கு தலா 5 கிராம் வெள்ளிப் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும், தேவஸ்தான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதற்கிடையில், ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் முதன்முறையாக நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் அப்துல் நசீர் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். இந்த விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..