Connect with us

உலகம்

இந்தியாவில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது கோகோ கோலா நிறுவனம்.. கசிந்த புகைப்படம்!

Published

on

கோகோ கோலா என்ற நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை, அந்த அளவுக்கு இந்தியர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கோகோ கோலா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சந்தையில் கோகோ கோலா நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதும் குளிர்பானம் விற்பனை செய்து வரும் நிறுவனமான கோகோ கோலாதற்போது புதிதாக ஸ்மார்ட் போன் சந்தையில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட் போனின் சிறப்பு பதிப்பாக இருக்கக்கூடும். அதாவது ரியல்மி நிறுவனத்துடன் இணைந்து கோகோ கோலா புதிய மாடல் ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையதளங்களில் கசிந்து உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட் போனில் எல்இடி பிளாஷ் கொண்ட இரட்டை பின்புற கேமரா இருக்கும் என்றும் அதேபோல் வால்யூம் பட்டன்கள் வலது பக்கத்தில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாடலின் பின்புற பேனலில் கோகோ கோலா பிராண்டிங் இருக்கும் என்று கசிந்த புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது. கோகோ கோலா ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி சிறப்பு பதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டால் 2400×1080 பிக்சல்கள் FHD+ மற்றும் 90 Hz AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு “ஒளி துகள்” அம்சம் இருப்பதாகவும், இது வெவ்வேறு கோணங்களில் இருந்து வண்ணங்களில் மாறுபாடுகளைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த மாடலில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கருப்பு மற்றும் வெள்ளை போர்ட்ரெய்ட் லென்ஸ், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

மேலும் 5000mAh பேட்டரியுடன் இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போனில் 5G வசதி இருக்குமா? என்பது வெளி வந்தவுடன் தான் உறுதி செய்யப்படும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?