Connect with us

தமிழ்நாடு

நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்!

Published

on

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இதுகுறித்து வேதனையுற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த மாணவர்களுக்கும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கும் நிதி உதவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரில் இயங்கிவரும் சாஃப்வேர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் இன்று காலை 10.50 மணி அளவில் பள்ளியில் உள்ள கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன் மற்றும் சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இசக்கி பிரகாஷ், சஞ்சய், ஷேக் அபுபெக்கர் மற்றும் அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்தை அறிந்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயம்பட்ட நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

இவ்வாறு செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?