தமிழ்நாடு
நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை சாப்டர் பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்வி என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் மோசமான நிலையில் இருப்பதை அறிந்தும் அதனை சீர் செய்யாமல் தலைமையாசிரியர் மெத்தனமாக இருந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது பள்ளி தலைமையாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ஆசிரியர்கள் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகத்தினர் இந்த விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீரென பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்த உடன் தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















