வணிகம்
தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தும் இந்தியா? ஊக்குவிக்கும் சீனா? எது சரி?

2025 மார்ச் மாதத்தில் சீனா ஒரு பெரிய முடிவை எடுத்தது. அங்குள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய சொத்துகளிலிருந்து குறைந்தபட்சம் 1% தங்கமாக வைத்திருக்கணும் என்று சட்டம் போட்டுள்ளது. இது சின்ன விஷயம் இல்ல. இந்த 1% மட்டும் தான் 45 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கணும் என்று அர்த்தம்.
அதனால, சீனா முழு நாடாக தங்க சேமிப்பை முக்கியம் என நினைக்கிறது. ஏற்கனவே அங்குள்ள மக்கள் தங்கம் வாங்கும் பழக்கத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. இப்போ அந்த முயற்சியை நிறுவனங்களுக்குக் கொண்டு வந்திருக்காங்க. இதனால, சீனாவுக்கு நிதியில் (finance) பாதுகாப்பு அதிகம் கிடைக்கிறது என சீனா நினைக்கிறது.
இந்தியா என்ன செய்கிறது?
இந்தியாவோ அதற்கு மாறாக நடக்குது. தங்கம் வாங்க வேண்டாம்னு சொல்லி நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்காங்க.
சவரன் தங்கப் பத்திரம் மாதிரி, பத்திரம் மாதிரியான தங்கம் தான் வாங்க சொல்லுறாங்க.
நம்ம கையில தங்கம் வைத்திருப்பது குறைய வேண்டும்னு அரசு முயற்சி செய்றது.
தங்க அடிப்படையில கடன் வாங்குறதில (Gold Loan) கூட சில வரம்புகள் போடப்பட்டிருக்குது.
அதாவது, நம்ம கையில நேரடி தங்கம் வைத்துக்கிற விஷயம் இந்திய அரசுக்கு பிடிக்கலை.
சீனா vs இந்தியா – வித்தியாசம்
சீனா சொல்லுது:
“தங்கம் இருக்கணும். அது நம்ம நாட்டுக்கு பாதுகாப்பு.”
இந்தியா சொல்லுது:
“அதிகமா தங்கம் வைத்துக்காதீங்க. நாங்க பத்திரமா வைக்க சொல்லுறோம்.”
இந்திய மக்கள் தங்கத்தை நம்புறாங்க – பரம்பரையா வாங்கிகிட்டு வந்துருக்காங்க. ஆனா அரசு அதை கட்டுப்படுத்துறது. சீனா மட்டும் அரசாகவே தங்கத்தை சேமிக்க சொல்கிறது. மேலும் இந்தியா தங்க நகை கடன் மீதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதனால் என்ன ஆகும்?
சீனா நிறைய தங்கம் வாங்கும் போது, தங்க விலை உலகம் முழுக்க அதிகமாகும்.
இந்தியா வரம்பு வைக்குறதால், மக்கள் விருப்பப்பட்டாலும் வாங்க முடியாம இழக்க நேரிடும்.
சீனா தங்கத்தைக் கொண்டு அமெரிக்க டாலரின் மீது உள்ள நம்பிக்கையை குறைக்கச் செய்றது.
தங்கம் ஒருபோதும் ‘பிளாக்’ ஆக மாட்டாது; அதனால்தான் சீனா அதில் முதலீடு செய்றது.
ஒரே தங்கம். ஆனா இரண்டு நாடுகள் – இரண்டு வித்தியாசமான கருத்து!
இந்தியா கட்டுப்பாடு போடுது. சீனா ஊக்குவிக்குது.
எது நமக்குப் பாதுகாப்பு? எது நமக்கு சுதந்திரம்? இதை யோசிக்கணும் நேரம் இது தான்.




















