இந்தியா
மதுவின் 5வது குழந்தை: ஆதார் அட்டையின் பெயரால் சிறுமிக்கு ஏற்பட்ட சிக்கல்!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டையில் பெயருக்கு பதிலாக மதுவின் 5வது குழந்தை என்று குறிப்பிட்டதன் காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பில்சி என்ற பகுதியில் உள்ள தினேஷ் என்பவர் தனது மகள் ஆர்த்தியை பள்ளியில் சேர்க்க சென்றார் அப்போது பள்ளி ஆசிரியர்கள் குழந்தையின் ஆதார் அட்டை வேண்டும் என கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் வீட்டுக்கு சென்று ஆதார் அட்டையை கொடுத்து போது அந்த ஆதார் அட்டையில் சிறுமியின் பெயருக்கு பதிலாக மதுவின் ஐந்தாவது குழந்தை என்று இடம்பெற்றிருந்தது.
இதனை அடுத்து இந்த ஆதார் அட்டை செல்லாது என்றும் இதில் ஆதார் எண்ணும் இல்லை என்றும் கூறி ஆர்த்தியை பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆதார் அட்டைகள் அரசு அலுவலகர்களால் வழங்கப்படுகிறது என்றும், அவர்களின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற தவறுகள் ஏற்படுகிறது என்றும், எனவே ஆதார் அட்டை அதிகாரிகள் கவனமாக பணியாற்ற வேண்டுமென உத்தரவிடுகிறோம் என்று அலட்சியமாக ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் உடனடியாக ஆர்த்தியின் ஆதார் அட்டையில் உள்ள தவறை சரிசெய்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.







