தமிழ்நாடு
40 மாணவிகளுக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்டது அண்ணாமலை பல்கலை விடுதி!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து விடுதி இழுத்து மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் மருத்துவக் கல்லூரிகளும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 40 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்த மாணவிகள் அனைவரும் விடுதி மாணவிகள் என்பதால் உடனடியாக விடுதியை மூட பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இளநிலை மாணவர்களுக்கு ஜனவரி 23ஆம் தேதி வரை விடுமுறை என்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வரும் மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






















