Connect with us

தமிழ்நாடு

சென்னை பல்கலையின் தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

Published

on

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜூன் இரண்டாம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பல்கலைக்கழக அதிகாரிகள் செய்துவந்தனர். இந்த நிலையில் சற்று முன் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஜூன் இரண்டாம் தேதி தொடங்கவிருக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலையின் செமஸ்டர் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..