தமிழ்நாடு
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இந்தப் பாதையில் இயக்கப்படவில்லை.
அதே போன்று கொயம்பேடு – அசொக் நகர் இடையிலான மெட்ரோ ரயில் மின்சாரப் பாதையிலும் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மின்சார ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாலும் ரயில் குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது.
வியாழக்கிழமை சிக்னல் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக மெட்ரோ பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.













