தமிழ்நாடு
அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12 மாவட்டங்களில் கனமழை என அறிவிப்பு!

அந்தமானில் குறைந்த அளவு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை அடுத்து தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனை அடுத்து நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் அந்தமான் பகுதியை ஒட்டி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


















