தமிழ்நாடு
பப்ஜி மதன் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபில் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் வகையில் பேசியதாகவும் சமீபத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவருடைய யூடியூப் சேனலை நிர்வாகம் செய்பவர் அவருடைய மனைவி கிருத்திகா என்பதால் அவரும் கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதன் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் சமீபத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் கைக்குழந்தையின் நலனை அடிப்படையாகக் கொண்டு கிருத்திகாவுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பப்ஜி மதன் மீண்டும் ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். தான் ஆபாசமாக பேசவில்லை என்றும் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் அவர் அவரது வழக்கறிஞர் இந்த ஜாமின் மனு குறித்து வாதாடினார். இதனை அடுத்து இந்த ஜாமீன் மனு மீது காவல்துறையினர் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் திங்கட்கிழமை சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதி செல்வக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் திங்கட்கிழமை மதனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
















