தமிழ்நாடு
ஒமிக்ரான் பரவல் எதிரொலி: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த சென்னை மாநகராட்சி

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பார்வை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் 34 பேர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பரவிய நிலையில் ஒரு சிலர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் சிலருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் அறிகுறி இருப்பதால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பரவாமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. சென்னையில் இதுவரை 26 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:
* கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்
* கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்
* சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்
* மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனத்துடன் உறுதி செய்ய வேண்டும்
* வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக் கூடாது


















