சினிமா செய்திகள்
பொண்ணுங்க மேல கைய வச்சாலே செத்துருவோம்னு தோணனும் சார்!
அதர்வா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ’100’ படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு எதிரான குரலாக இந்த படம் உருவாகியுள்ளது டீஸரிலேயே தெரிகிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் வெளியான வீடியோவில், அண்ணா விட்ருங்கண்ணா.. என அந்தப் பெண் கதறிய வீடியோ, தேசத்தையே உலுக்கிய நிலையில், 100 படத்தில், அதேபோன்ற ஒரு விஷயத்தை இயக்குநர் சாம் ஆண்டன் வைத்து இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். யோகிபாபு, ராதாரவி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

















