வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம் – பணிநீக்கமால் ஓய்வூதியம் இல்லை!

பொதுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம் – மத்திய அரசு புதிய அறிவிப்பு
மத்திய அரசு, ஓய்வூதிய விதிமுறைகளில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் 2003 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், ரயில்வே ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த விதிகள் பொருந்தாது.
2024 ஏப்ரல் 1 முதல் நடைமுறையில் உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் படி, ஓய்விற்குச் செல்லும் ஊழியரின் கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தின் 50% ஓய்வூதியாக வழங்கப்படுகிறது. முழுமையான ஓய்வூதியத்திற்கு 25 ஆண்டுகள் அரசு பணியிலிருத்தல் அவசியம் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்களிப்பு முந்தைய 14% இலிருந்து தற்போது 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தையும் குடும்ப ஓய்வூதியத்தையும் இழக்கக்கூடும். ஆனால், இது அவர்களின் எதிர்கால நடத்தை மற்றும் அமைச்சக மறுஆய்வின் அடிப்படையில் முடிவடையக்கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கருணை அடிப்படையில் சில சமயங்களில் ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்படும் என்றும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

