Connect with us

இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எத்தனை நாள் ஊதியம் தெரியுமா?

Published

on

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

11 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வரும் ரயில்வே துறையில் ரயில்வே அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் வழங்கலாம் என மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

இந்த பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்ட மத்திய அரசு 78 நாள் ஊதியம் போனஸ் வழங்க அனுமதி அளித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் நேற்றைய அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரயில்வே ஊழியர்களின் போனஸ் தொகையை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-21 ஆம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் இந்த போனஸ் வழங்கப்படுvaதன்மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் என்பது கிட்டத்தட்ட இரண்டரை மாத சம்பளம் என்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..