வணிகம்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்வர் 15 வரை நீட்டிப்பு! ஜூலை 31-க்கு பிறகு செய்தால் அபராதம் செலுத்த வேண்டுமா?

வருமான வரித்துறை 2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான இறுதி நாளை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே, ஜூலை 31-க்குப் பிறகு வருமான வரியை தாக்கல் செய்தாலும், அபராதம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது வருமானத் தொகையை முறையாக கணக்கிட்டு செலுத்தும் தரப்பு மக்களுக்கு ஒரு முக்கியத் தகவலாகும்.
முந்தைய நிலைப்படி, இந்த காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்றால், வருமான வரி சட்டம் 234A படி ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட வேண்டிய வரி பொருப்புகளுக்கு ஒவ்வொரு மாதத்துக்கும் 1% அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது இந்த அவகாசம் செப்டம்பர் 15 வரை வழங்கப்பட்டுள்ளதால், இந்த தேதிவரை வருமான வரி தாக்கல் செய்தால் எந்தவித அபராதமும் இருக்காது.
இது தவிர, அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டியவர்கள் குறிப்பிட்ட காலத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், வருமான வரி சட்டப் பிரிவுகள் 234B மற்றும் 234C படி கூடுதல் வட்டியுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

















