செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்கம் வழங்கப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரொக்கமாக ரூ.750 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.750 நிதி நேரடியாக அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், நாட்டின் விலைவாசி நிலைமையை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 தொகுப்பை பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















