செய்திகள்
வட்டியை குறைத்த கனரா வங்கி: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

கனரா வங்கி FD வட்டி குறைப்பு – பொதுமக்களும் மூத்த குடிமக்களும் அதிர்ச்சி!
நாட்டின் முன்னணி அரசுப் பொருளாதார வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, தனது நிலையான வைப்பு திட்டங்களுக்கு (FD) வழங்கப்படும் வட்டியை குறைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏப்ரல் 10, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வட்டி விகிதங்களின்படி,
பொதுமக்களுக்கு 4% முதல் 7.25% வரை,
மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரை FD வட்டி வழங்கப்பட உள்ளது.
முன்பு இது,
பொதுமக்களுக்கு 4% முதல் 7.40% வரை,
மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.90% வரை இருந்தது.
தற்போதைய FD வட்டி விகித விவரங்கள்:
7 முதல் 45 நாட்கள் – 4%
46 முதல் 90 நாட்கள் – 5.25%
91 முதல் 179 நாட்கள் – 5.5%
180 முதல் 269 நாட்கள் – 6.15% (முந்தையது: 6.25%)
270 நாட்கள் முதல் 1 வருடம் – 6.25%
1 வருடம் – 6.85%
444 நாட்கள் – 7.25%
1 – 2 வருடங்கள் – 6.85%
2 – 3 வருடங்கள் – 7.15% (முந்தையது: 7.30%)
3 – 5 வருடங்கள் – 7.20% (முந்தையது: 7.40%)
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வட்டி:
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு, 4% முதல் 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 180 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட FD-களுக்கு 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படும் (NRO/NRE மற்றும் CGA தவிர).
முன்கூட்டியே திரும்பப் பெறுதலில் அபராதம்:
மார்ச் 12, 2019 முதல், ரூ.3 கோடிக்குக் குறைவான FD-களில்,
முன்கூட்டியே மூடல்,
பகுதி திரும்பப் பெறுதல்,
முன்கூட்டியே நீட்டிப்பு ஆகியவற்றிற்கு 1% அபராதம் விதிக்கப்படும்.









