Connect with us

உலகம்

கால் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது: கூகுள் அதிரடி அறிவிப்பு

Published

on

செல்போனில் கால் வரும்போது அந்த கால் ரெக்கார்டிங் செய்யும் வசதியை தற்போது ஒரு சில செயலிகள் மூலம் இருக்கும் நிலையில் மே 11ஆம் தேதி முதல் கால் ரெக்கார்டிங் செயலிகள் செயல்படாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் இனி அனைத்து கால் ரெக்கார்டிங் செயலிகளும் தடை செய்யப்படும் என்றும் ஏற்கனவே போனில் கால் ரெக்கார்டு செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அந்த செயலிகள் வேலை செய்யாது என்றும் கூகுள் அறிவித்துள்ளது .

எனவே இனிமேல் செல்போன் பயனாளர்கள் தங்களுக்கு வரும் கால் ரெக்கார்டிங் செய்ய முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் செல்போனில் உள்ள பில்ட்-இன் கால் ரெக்கார்டிங் வசதியை பயன்படுத்த முடியும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை நம்முடைய செல்போனில் பில்ட் – இன் கால் ரெக்கார்டிங் வசதி இல்லை என்றால் மே 11-ஆம் தேதிக்கு பின்னர் கால் ரெக்கார்டிங் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

ட்ரூ காலர் உள்பட பல கால் ரெக்கார்டிங் செயலிகள் தற்போது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கால் ரெக்கார்டிங் செய்யும் வசதி பிரவைசியை கேள்விக்குறியாகி விட்டது என்றும் ஒரு சிலர் இந்த செயலிகள் மூலம் கால் ரெக்கார்டிங் செய்து துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து இந்த கால் ரெக்கார்டிங் செயலிகள் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?