செய்திகள்
குறைந்த செலவில் கொடைக்கானல் சுற்றுலா: சரியான திட்டமிடலால் முழுமையாக அனுபவிக்கலாம்!

சரியான திட்டமிடல் இருந்தால், குறைந்த செலவில் கூட கொடைக்கானலின் இயற்கை அழகை முழுமையாக அனுபவிக்கலாம்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், கூட்டம் குறைவாக இருக்கும் இந்த நேரம், பட்ஜெட் பயணிகளுக்கு மிகச் சிறந்த காலமாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் செலவுகள் கூடும். ஆனால் ஜூலை முதல் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் நவம்பர் வரை செல்லும் போது தங்குமிடங்களில் தள்ளுபடிகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். மேலும், பேருந்து மற்றும் விடுதிகளை முன்கூட்டியே பதிவு செய்தால், தேவையற்ற கூடுதல் செலவுகளை தவிர்க்க முடியும்.
கொடைக்கானலில் விமான நிலையமோ, பெரிய ரயில் நிலையமோ இல்லாததால், அருகிலுள்ள மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களில் இருந்து அரசு பேருந்துகளைப் பயன்படுத்துவது மிகக் குறைந்த செலவில் பயணம் செய்யும் வழியாகும்.
தங்குமிடங்களில் Hostels மற்றும் Dormitories தனியாகப் பயணிக்கும்ோர் மற்றும் நண்பர்களுடன் செல்லும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஏரிக்கு அருகிலுள்ள விடுதிகளில் தங்குவதால், Coaker’s Walk, Bryant Park போன்ற முக்கிய இடங்களை நடந்து சென்று பார்க்க முடியும்.
சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் –
Coaker’s Walk: அழகான நடைபாதை, குறைந்த நுழைவு கட்டணத்துடன்.
Bryant Park: மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா.
Pine Forest: புகைப்பட பிரியர்களுக்கு இலவசமாக அனுபவிக்க சிறந்த இடம்.
Pillar Rocks, Guna Caves: குறைந்த நுழைவு கட்டணத்துடன் கண்ணைக் கவரும் இடங்கள்.
Silver Cascade Falls: இலவசமாக ரசிக்கக்கூடிய அழகிய நீர்வீழ்ச்சி.
Dolphin’s Nose: சாகசத்திற்கான சிறந்த Trekking இடம்.
உணவு செலவுகளை குறைக்க உள்ளூர் சிறிய உணவகங்களைத் தேர்வு செய்வது சிறந்தது. மேலும், கொடைக்கானலின் பிரபலமான ஹோம்மேட் சாக்லேட்டுகள், யூகலிப்டஸ் தைலம், மசாலா பொருட்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலோ அல்லது உள்ளூர் சந்தைகளிலோ வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.


















