தமிழ்நாடு
தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது: பாஜக நாராயணன் திருப்பதி தடாலடி

தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம்.
காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து அம்மாநில அரசு ஒன்றிய அரசின் முக்கியப் புள்ளிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்படி அணைக் கட்டினால் தமிழ்நாட்டிற்குக் காவிரி நதி மீதுள்ள அதிகாரம் பறிபோகும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையில் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. நிலைமை இப்படியிருக்க, தமிழக பாஜக, கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தில் நிலைப்பாடு எடுத்துள்ளது. மேலும் கர்நாடக அரசுக்கு எதிராகப் போராட உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.
இது ஒரு பக்கம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கும் நிலையில், தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாரயணன் திருப்பதி, ‘மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை. தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது’ என்று கூறியுள்ளார். அவர் எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார் என்று தெரியவில்லை.






















