சினிமா செய்திகள்
பிக்பாஸ் சாண்டி வீட்டில் விசேஷம்: வாழ்த்தும் பிரபலங்கள்!

பிக்பாஸ் புகழ் மாஸ்டர் சாண்டி வீட்டில் நடந்த விஷயத்தை எடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
பிக்பாஸ் சாண்டிக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது தெரிந்ததே. அந்த குழந்தை பிக்பாஸ் சீசன் 3 நடந்து கொண்டிருந்த போது தனது அம்மாவுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது என்பதும் அந்த குழந்தையை அனைவரும் கொஞ்சி மகிழ்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது சாண்டியின் மனைவி கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து அவருக்கு வளைகாப்பு விசேஷம் நடந்தது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் லாலா பாப்பா தனது அம்மாவிற்கு நலங்கு போட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பிக்பாஸ் சாண்டி மனைவி கர்ப்பமாக இருப்பதை அடுத்து திரை உலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















